November 14, 2025
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வர்த்தகர்..!
புதிய செய்திகள்

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வர்த்தகர்..!

Jun 20, 2024

நுவரெலியா – நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு (18.06) கைது செய்ப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது வீட்டில் சிறிய வர்த்தக நிலையம் ஒன்று நடத்தி வருவதாகவும் சிறுமி வர்த்தக நிலையத்திற்கு வந்த போது அவரை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சிறுமியின் நிலை நீண்ட நாட்களாக பெற்றோர்களுக்குத் தெரியாது இருந்ததாகவும் திடீர் சுகயீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலைமையில் மாணவி கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (19.06) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முந்நிலைப்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *