Tamil News Channel

இலங்கையை உலுக்கிய கோர விபத்து..!

accident

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று பிற்பகல் (19) உயிரிழந்துள்ளனர்.

மேலதிக வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக இரு பிள்ளைகளுடன் தாய் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த 41 வயதான தாய் ஷாலிகா தில்ருக்ஷி, ஒன்பது வயது மகள் சிதுமி சாவிந்தி ஜயலத் மற்றும் ஏழு வயது மகன் சசன் மந்துல ஜயலத் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ​​ரயில் இயங்கினாலும் கடவை மூடப்படவில்லை எனவும், அப்போது கடவை நடத்துநர் அங்கு இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தாய் கவனமாக இருந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்த பொலிஸ் அதிகாரி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *