இந்த மாதத்தின் முதல் 8 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 10,153 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரித்தானியாவில் இருந்து 4,860 சுற்றுலாப்பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப்பயணிகளும் வருகைதந்துள்ளனர்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், 1,216,344 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.



