Tamil News Channel

இலங்கையை பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா?: ரணிலிடம் கேட்ட சம்பந்தன்!  

thumb_sampanthan_7

சர்வதேச நாணய நிதியத்திடம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

இந்த உரையின் இறுதியில் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனை நினைவும்கூறும் வகையில் சில கருத்துகளையும் அவர் வெளியிட்டிருந்தார்.

”நானும் இரா.சம்பந்தனும் ஒரே காலகட்டத்தில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தோம் என்பதுடன், இருவரும் மிகவும் இக்கட்டான காலகட்டத்திலேயே பணியாற்றியிருந்தோம்.

அவர் வழங்கிய ஒத்துழைப்புகள் என்னவென எனக்குத் தெரியும்.

ஒரு சிறுவனமாக சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நான் ஒருமுறை நான் நாட்டை பிரிக்க முற்படுவேன் என்று நினைக்கிறீர்களா ரணில்? எனக் கேட்டார்.

அத்தருணத்தில் நாங்கள் எவரும் பிறந்திருக்கவில்லை.

என்றாலும், அதிகார பகிர்வு குறித்து அவர் ஒரு தனிப்பட்ட நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

அதிகாரப்பகிர்வுக்காக பரந்தப்பட்ட பணியை ஆற்றினார்.

என்றாலும், குறிப்பிட்ட சில விடயங்களை செய்ய முடியாது போனது.” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts