December 13, 2025
இலங்கையை வந்தடைந்த 2 குற்றவாளிகள்…!!
புதிய செய்திகள்

இலங்கையை வந்தடைந்த 2 குற்றவாளிகள்…!!

Jul 12, 2024

இலங்கையில் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்து டுபாயில் பதுங்கியிருந்த 2 இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (12.07) அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான களுதுர தினேஷ் சாமந்த டி சில்வா என அழைக்கப்படும் ‘பாபி’ மற்றும் மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான கங்கனம்லாகே திமுத்து சதுரங்க பெரேரா ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 05.10 மணி அளவில் டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கங்கனம்லாகே திமுத்து சதுரங்க பெரேரா  கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடமும், களுதுர தினேஷ் சாமந்த டி சில்வா கொழும்பு நாரஹேன்பிட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *