கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் இலங்கையில் இருந்து கிட்டத்தட்ட 400 மருத்துவ நிபுணர்கள் வெளியேறியுள்ளனர்.
இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பாரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிட்டத்தட்ட 5,000 இலங்கை வைத்தியர்கள், வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான பரீட்சைகளில் சித்தியடைந்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
எனவே, இது இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தெரிவுகள் இன்மையால், சுகாதார அமைச்சகம் இறுக்கமான நிலையில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post Views: 2