Tamil News Channel

இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்  

நடைபெற்ற இலங்கை மற்றும் பங்ளாதேஷ் அணிகளுக்கிடயிலான இரண்டாவது டி20 தொடரில் பங்களாதேஷ் அணி 08 விக்கெட்டுக்களால்  வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் ( Kamindu Mendis) 27 பந்துகளில் 37 ஓட்டங்களைப் அதிகபட்சமாகப்  பெற்றார்.

பந்துவீச்சில் சௌமியா சர்க்கார் (Soumya Sarkar), தஸ்கின் அகமது (Taskin Ahmed) மற்றும் மகேதி ஹசன் (Mahedi Hasan) ஆகியோர் தலா 01 விக்கெட் வீதம் பங்களாதேஷ் அணி சார்பில்  வீழ்த்தினர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் அணி 18.2 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது

பங்களாதேஷ் அணி சார்பில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (Najmul Hossain Shanto) 38 பந்துகளில்  53 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரன (Matheesha Pathirana) 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ (Najmul Hossain Shanto) தெரிவானார்.

இத்தொடரில் 1-1  என்ற கணக்கில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் சமனிலை வகிக்கின்றன. ட்

தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் அடுத்த போட்டி மார்ச் 09 பிற்பகல் 3.00 மணியளவில் பங்களாதேஷ் சிலேட் (Sylhet) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts