நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஜோர்ஜியா பிளிமர் 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சுகந்திகா குமாரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில் 281 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 எனும் அடிப்படையில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.