உலகக் கிண்ணத்தின் தனது முதல் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி குறித்து இந்திய முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த 3ம் திகதி நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியிருந்தது.
இலங்கை அணி 19.1 ஓவர்களில் 77 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததன் மூலம் தென் ஆபிரிக்காவிற்கு வெற்றியை வழங்கியதாக ராய்டு குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தப் போட்டியின் திருப்பு முனையாக நாணய சுழற்சியே அமையப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது தெரியாத நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடுவது மிகவும் ஆபத்தானது எனவும் இலங்கை அணி அந்த விபரீத சோதனையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா அணியைப் போன்று இலங்கை அணியினால் விளையாட முடியாது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது