July 18, 2025
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வெளியிட்டுள்ள கருத்து!
புதிய செய்திகள்

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வெளியிட்டுள்ள கருத்து!

Jul 1, 2024

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலைகளுக்கு முன்பாக நாளை மதியம் 1.30 மணிக்கு கறுப்பு பட்டிகளை தாங்கியவாறு போராட்டம் நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்க யாழ்ப்பாண கல்வி வலய செயலாளர் தாராளசிங்கம் பிரகாஷ் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் ஆசிரியர் அதிபர்கள் போராட்டம் நடைபெறவில்லை என்று அரசாங்கம் பிரிவினைவாத கருத்தை வெளியிட்டமையை கண்டித்தும் ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பில் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று சொன்னதற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் இலங்கை அதிபர் சேவை சங்க யாழ் மாவட்ட பிரதிநிதி துரைராசா ஜீவானந்தன், இலங்கை ஆசிரியர் சேவை சங்க வலிகாமம் கல்வி வலய பிரதிநிதி பரமசிவம் கஜமுகன் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *