January 13, 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த மீனவர்கள் கைது!
புதிய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த மீனவர்கள் கைது!

Jul 11, 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்து பதின்மூன்று இந்திய மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *