இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பயிற்சி திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கினால் Ship-in-a-Box கடல்சார் பயிற்சி நிலையம் கிரிந்தவில் உள்ள இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் மேம்பட்ட பயிற்சி மையத்தில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி திட்டமானது இலங்கைக்கும்,அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கு உதவுவதுடன் இந்த பயிற்சி திட்டத்தின் மூலம் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்தவும் கடல்சார் சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
இந்நிகழ்வில், இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான , கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.