நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய கட்டளைகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் வந்த ஐந்து படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.



