Tamil News Channel

இலங்கை காணிகள் இந்திய நிறுவனத்திற்கு..!

மன்னார் – நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மணல் அகழ்விற்காக இந்தப் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சுமார் 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உத்தியோகபூர்வமாக இல்லாதபோதிலும், பலாலி சர்வதேச விமான நிலையம், பல்வேறு வேலைத்திட்டங்கள், படகு சேவை ஆகியவற்றை ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இந்திய வடக்கு – கிழக்கில் தமது கால்தடத்தை படிப்படியாக பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts