December 13, 2025
இலங்கை கிரிக்கெட் மீதான முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்படும் சாத்தியம்
News Sports இலங்கை அரசியல் புதிய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் மீதான முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்படும் சாத்தியம்

Nov 21, 2023

இன்று இந்தியாவின் அஹமதாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டுமானால், அதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகள் பங்குபற்றும் இக்கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வையாளர் மட்ட பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, இலங்கை கிரிக்கெட் தலைவரால் செயற்பாட்டு மட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.

அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *