நாளையதினம்(17) இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது நவீனமயப்படுத்தப்பட்ட தம்புள்ளையில் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நேற்று(15) வியாழக்கிழமை அதிகளவான மக்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படியில் இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகவே, போட்டியை காண டிக்கெட் வாங்க வருவதை தவிர்க்குமாறு விளையாட்டு ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.