Tamil News Channel

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு

bar association of sri lanka

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை  (10) சங்கத்தின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌல்ய நவரடண தலைமைப்பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதேநேரம், செயலாளர் பதவிக்கு சட்டத்தரணி சத்துர கல்ஹேன வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்..

இந்த தெரிவுக்கான தேர்தல் அதிகாரியாக அலுவலகர் சொலிஸ்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திக தேமுனி டி சில்வா செயற்படவுள்ளார்.

இதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்று மாலையில் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வேறெந்த வேட்பு மனுக்களும் குறித்த பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காத நிலையில்,

தற்போதைய நிருவாகத்தினரே ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts