பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இலங்கை சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 01 கிலோ கடலையின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 448 ரூபாவாகும்.
01 கிலோ சிவப்பு சீனி 05 ரூபாவினால் 01 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.