February 9, 2026
இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு ஜனவரியில்
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு ஜனவரியில்

Dec 19, 2023

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு ஏற்கனவே திட்டமிட்டபடி இடம்பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடவுள்ளது.

இதன் போது புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூடவுள்ளது 27ம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது.

அதற்கு அடுத்த நாளான 28 ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் நேற்று (18) அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யாப்பின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மாநாடு நடைபெற இருப்பதினால் விழா குழுவாக திருகோணமலை மாவட்ட கிளை செயற்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதாகவும் பிரதேச ரீதியாக பிரதிநிதித்துவத்தை கூட்டுவது தொடர்பாகவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *