Tamil News Channel

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவருக்கு அஞ்சலி நிகழ்வு!

WhatsApp Image 2024-07-01 at 19.13.46_a075f15a

நேற்றுமுன்தினம் மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

இந் நிகழ்வு  யாழ்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

தொடர்சியாக அன்னாரின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தபட்டது.

தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

இதன் பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்,முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் , இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணி , தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts