அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பல கட்சிகள் கையொப்பமிட்டு வருகின்ற நிலையில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை எவ்வித கையொப்பமும் இடவில்லை.
அதற்கு காரணம் தேசிய சபையின் அனுமதி இன்றி கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், தவிசாளர் என எவரும் எவ்வித முடிவும் எடுக்கமுடியாது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானால் உருவாக்கப்பட்டது.
தேசிய சபையின் அங்கீகாரம் இன்றி கட்சியால் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அம்முடிவுகள் செல்லுபடியாகாது.
கட்சியில் 500 அங்கத்தவருக்கு 1 தேசிய சபை உறுப்பினர் என்ற அடிப்படையில்,200 அங்கத்தவர்கள் தேசிய சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
அந்த தேசிய சபையில் எடுக்கப்படும் தீர்மானத்தையே கட்சியின் தலைவர்,பொதுச் செயலாளர், தவிசாளர் என அனைவரும் பின்பற்ற முடியும். அவ்வாறே கட்சியின் அரசியலமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சக்திவாய்ந்த முதுகெலும்பே தேசிய சபை. கடந்த காலத்தில் மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரால் தேசிய சபையின் அனுமதியுடனே முக்கிய தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது.
பல கட்சிகள் யாருக்கு ஆதரவு என்பதை தெரியப்படுத்தியுள்ள நிலையில்,இலங்கை தொழிலாளர் காங்கிரசால் எந்த ஒரு தீர்மானத்தையும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.