
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் கட்சியிலிருந்து விலகல்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.பிலிப்குமார் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 37 வருடங்களாக கட்சியின் உறுப்பினராக இருந்த பிலிப்குமார் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டவர்.
இளைஞர் அணி இணைப்பாளராக இணந்து கொண்ட அவர் கட்சியின் உபசெயலாளராகவும் விலகும் போது உபதலைவராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர் 30 ஆயிரம் வாக்குகளை பெற்றவர் .