இலங்கை மெய்வல்லுர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 102 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஜுன் மாதம் 25 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் மெய்வல்லுநர்களிடம் இருந்து அல்லது அவர்கள் சார்பில் கழகங்கள், பாடசாலைகள், மாவட்ட சங்கங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இவ்விண்ணப்பத்திக்கான முடிவு திகதி ஜூன் 18 ஆம் திகதி ஆகும் என இலங்கை மெய்வல்லுர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.