January 13, 2026
இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!
புதிய செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

Mar 18, 2025

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், ​​இன்று (18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் , விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 60 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 30 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா 53 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 78 சதம், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 68 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 83 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 77 சதம், விற்பனைப் பெறுமதி 211 ரூபாய் 42 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபாய் 37 சதம், விற்பனைப் பெறுமதி 193 ரூபாய் 59 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 51 சதம், விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 44 சதம்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *