சின்னத்திரை பிரபலம் குரேஷி இலங்கையில் பாடகியொருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கை வந்தாரா குரேஷி
தற்போது சின்னத்திரை பிரபலங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அதிகமாகி வருகிறது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக பிரபலமாகியவர் தான் குரேஷி. இவர், கோமாளி மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
சிவாங்கி, குரேஷி, பிரியங்கா கூட்டணியில் ஒருவராகவும் இருப்பதால் இவரை தெரியாதவர் என்று யாரும் இருக்க முடியாது. தன்னிடம் உள்ள திறமையை மாத்திரம் வைத்து மீடியாத்துறையில் பிரபலமாகி வருகிறார்.
இலங்கை வந்தாரா?
இந்த நிலையில், குரேஷி ஒரு சில படங்களில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குரேஷி இலங்கை வந்துள்ளார்.
சூப்பர் சிங்கர் புகழ் ஐக்கி பெர்ரியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த பயனர்கள், இணையத்தில் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.