இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொலனறுவை வனவிலங்கு வலயத்தில் 96 யானைகளும், கிழக்கு வனவிலங்கு வலயத்தில் 86 யானைகளும், அநுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 82 யானைகளும் உயிரிழந்துள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளன.
இந்தக் காலப்பகுதிக்குள் பதிவான சம்பவங்களில் 81 யானைகள் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.