இலங்கை கிரிக்கெட் அணியுடன் ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டம்பர் இலங்கை வரவுள்ளது.
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செப்டெம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு இரண்டாவது போட்டி செப்டெம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த இரு போட்டிகளும் காலியிலேயே நடைபெறவுள்ளன.
குறித்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிம் சௌதி அணித்தலைவராக செயற்படவுள்ளதோடு டொம் பிளன்டல் , மைக்கல் பிரேஸ்வெல், டெவோன் கொன்வே, மட் ஹென்ட்ரி, டொம் லதம் (உப தலைவர்), டரில் மிட்சல், வில் ஓருக், அஜே பட்டேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, மிட்சல் சான்ட்னர், பென் சீர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங் விளையாடவுள்ளனர்.