கசிப்பு விற்பனையாளரிடமிருந்து 6000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பெந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் கொஸ்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உப பரிசோதகர், பொலிஸ் சர்ஜன்ட் மற்றும் பொலிஸ் சாரதி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் வழங்கிய நபர் தனது கையடக்கத் தொலைப்பேசியில் இலஞ்சம் கொடுப்பதை காணொளியாக பதிவு செய்து எல்பிட்டிய சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளதையடுத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கைதான மூவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (18.08) பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.