கொழும்பு ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றவாளியான ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நேற்று இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரச்சந்திர 2022 இல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக அத்துரலியே இரத்தின தேரர் இலஞ்சமாக பணத்தை பெற்றுள்ளார்.
2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் காண்டோமினியம் வளாகத்தில் இவோன் ஜோன்சன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அவருக்கு 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது.
ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவை இலங்கை உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு ஜூன் மாதம் ரத்து செய்தது.