இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்ட கயந்த கருணாதிலக்க..!!
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11.12.2025) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே கயந்த கருணாதிலக்க அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான காலத்தில் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இன்று காலை 9 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகி சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]()