இலவச அரிசியால் உயிரிழந்த கோழிகள்..!
ரிதிகம பனகமுவிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி சிலவற்றை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன.
சுகாதார அதிகாரிகள் முன்வைத்த இச் சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கையை உடனடியாக வழங்குமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரிசியை உண்ட கோழிகள் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்ததாக வீட்டு உரிமையாளர் பொது சுகாதார அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()