கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகுடாவ பகுதியில் நேற்று (03) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பலகுடாவவைச் சேர்ந்த அந்த பெண் தாக்குதலில் படுகாயமடைந்து கல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளில், அந்த பெண் தனது கணவரிடமிருந்து பிரிந்து சந்தேக நபருடன் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. நீண்டகால குடும்பத் தகராறு காரணமாக, சந்தேக நபர் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கியதாக நம்பப்படுகிறது.

சம்பவம் நடந்த 45 நிமிடங்களுக்குள் 36 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here