கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்த 6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குற்பட்டவர்கள் என்பதோடு அவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.