இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பின்னால் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் – ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

0
5

ஜெருசலேம் மீது நடத்தப்படும் இஸ்ரேலின் தாக்குதல்களும், பாலஸ்தீனியர்களின் இடம்பெயர்வையும் தெளிவாகக் குறிவைக்கும் வகையில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன தொடர்பாளர் பிரான்செஸ்கா ஆல்பனீஸின் அந்த அறிக்கையில், இஸ்ரேலுக்கு உதவும் 48 முன்னணி நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், அல்பபெட் இன்க் (கூகுள் தாய்க் நிறுவனம்) மற்றும் அமேசான் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, 1000க்கும் அதிகமான வணிக நிறுவனங்களைக் கொண்ட தரவுத்தொகுப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இஸ்ரேலின் நிரந்தர ஆக்கிரமிப்பு, ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சோதனை மேடையாக மாறியுள்ளது – இந்த சந்தையில் தேவை அதிகம், கண்காணிப்பு குறைவாகவும், பொறுப்பேற்பு எதுவுமின்றியும் இருக்கிறது. இந்த சூழலைப் பயன்படுத்தி முதலீட்டாளர்களும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் லாபம் ஈட்டுகின்றன.

மேலும் அறிக்கையில்,

நிறுவனங்கள் இப்போது வெறும் ஆக்கிரமிப்பு மற்றும் இன அழிப்பு பொருளாதாரத்தில் பங்காளிகளாக மாறிவிட்டன,” என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முடிவில், இஸ்ரேலின் காசா மீதான தாக்குதல் ஏன் தொடர்கிறது என்ற கேள்விக்கு பதிலாக:

ஏனென்றால் அது பலருக்கு இலாபம் ஈட்டித் தருகிறது” என்பது போன்ற கடும் விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here