இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நேற்று முன்தினம் பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் வீதிகளில் இறங்கிபோராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வருமாறும் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என கோரியும்
அத்துடன் பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்று அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற போது அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீட்டிற்கு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் விதிகளில் பொருட்களை போட்டு தீ வைத்து கொளுத்தியமையினால் இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியதாக கூறப்பட்டுள்ளது.