
இஸ்ரேலுக்கு தடை விதித்த மாலைதீவுகள்!!…
இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) மாலைத்தீவுகள் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து, இந்திய கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்லுமாறு இஸ்ரேலியர்களை இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் லட்சத்தீவு, கோவா, அந்தமான், நிகோபர் தீவுகள், கேரளா ஆகியவற்றின் கடற்கரை புகைப்படங்களையும் இணைத்து இந்த கோரிக்கையை இஸ்ரேலிய தூதரகம் விடுத்துள்ளது.
இதற்கமைய அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து, மாலைத்தீவின் அதிபர் முகமது மொய்சு இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.