Tamil News Channel

இஸ்ரேல் இராணுவத்தின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் பலி..!

!1

காசா(Gaza) வடக்கு எல்லை பகுதியான பெய்ட் ஹனெளனில் நடத்தப்பட்ட வான்வளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் ஸ்னைப்பர் பிரிவுக்கு தலைமை வகித்த அகமது அல் சவர்கா இராணுவ போர் விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் இராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே(Avichay Adraee)  கூறியுள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களில் அகமது அல் சவர்கா முக்கிய பங்கு வகித்து வந்ததாக குறிப்பிடப்படுகிறது.

மத்திய காசா மற்றும் தெற்கு ரஃபா பகுதிகளில் ஹமாஸ் அமைப்பை அழிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து காசாவில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள் கூறும் போது, இதுவரை பாலஸ்தீனம் சார்பில் 37 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 653 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts