இஸ்ரேல்-காசா போர் விரைவில் முடிவடையலாம் – டொனால்ட் ட்ரம்ப்!
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
போர்நிறுத்தத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் டொனால்ட் ட்ரம்பும் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, அமைதி முயற்சியாக 20 அம்ச அமைதி திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த அமைதி திட்டம் குறித்து இன்னும் எந்தவொரு அதிகாரபூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அமைதி முயற்சி, திடீர் மாற்றங்களை ஏற்படுத்துமா, அல்லது நிலைமை மேலும் சிக்கலடையுமா என்பதற்கான பதில்கள், எதிர்வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()