இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து ஈராக் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில, இந்த தாக்குதலுக்கு ஈராக்கை தளமாக கொண்டு செயல்படும் கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ஈராக் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.