பொதுவாக மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளையே தாம் நாடாளுமன்றில் முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கவில்லை என அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.
இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார்.
சிறுபிள்ளைகளையும், பெண்களையும் மாத்திரமே தாம் கருத்திற் கொண்டு பேசியதாகக் கூறினார்.
எந்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் செயற்படவில்லை என தம் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இதனைக் கூறியிருந்தார்.