ஈரான் கண்டனம் சிட்னியில் நடத்தப்பட்ட தாக்குதல்..!!!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது.
பயங்கரவாதமும் மக்களைக் கொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
இவ்வாறான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனை ஈரான் கண்டிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நேற்று(14.12.2025) கூடியிருந்த மக்களை இலக்கு வைத்து 2 துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்தச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()