ஈழத்து பெண் ஜனனி துளியும் மேக்கப் இல்லாமல் பதிவிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் மூலம் பிரபல்யமடைந்து பிரபலப தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது. அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கைதமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.
ஒரு கட்டத்தில் ஜனனியால் செய்ய முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு விலகிய ஜனனி தற்போது சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான “லியோ” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜனனியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, துளியும் மேக்கப் இல்லாமல் ரீல்ஸ் செய்து காணொளியொன்றை பதிவிட்டுள்ளனர்.
காணொளியை பார்த்த ஜனனி ரசிகர்கள், “ மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகாக இருக்கீங்களே..” என கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.