December 17, 2025
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பில்லாதவர்களால் மட்டுமே நீதி வழங்க முடியும்; அனுரகுமார திஸாநாயக்க!
புதிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பில்லாதவர்களால் மட்டுமே நீதி வழங்க முடியும்; அனுரகுமார திஸாநாயக்க!

Aug 20, 2024

தனது நிர்வாகத்தின் கீழ் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை மற்றும் நீதியைப் பெற்றுத் தருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் டொன் நோர்பர்ட் மார்ஷல் அவரை சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

மேலும் இந்த தாக்குதலில் தற்போதைய அரசாங்கத்தின் தலையீடு குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர் இதுவரை வெளிவந்துள்ள உண்மைகளின்படி, உண்மையில் அரசாங்கத்தை கைப்பற்றியவர்கள் ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களா என்ற நியாயமான சந்தேகம் மக்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலைத் திட்டமிட்டு, தாக்குதலுக்குத் தயாரானவர்கள், தாக்குபவர்களை ஒருபோதும் தண்டிக்க மாட்டார்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்பில்லாதவர்களால் மட்டுமே நீதி வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதத் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு தமது கட்சி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக உறுதியளித்துள்ளார். “நாங்கள் உத்தரவாதம் செய்கிறோம், நாங்கள் இதைத் தீர்ப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் நியாயம் செய்வோம்,” என்று அவர் உறுதியளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *