ரஷ்யாவானது உக்ரைன்மீது மிகப்பெரிய வான் தாக்குதலை நேற்றைய தினம் {29} மேற்கொண்டிருந்தது.
உக்ரைன் ரஷ்யா போரிலே இதுவே மிகப்பெரிய ரஷ்ய வான்தாக்குதலென உக்ரைனின் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக உக்ரைன் தலைநகர் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.