ரஷ்யாவின் சில பகுதிகளை உக்ரெய்னிய படைகள் சுமார் பதினைந்து நாட்களாக கைப்பற்றி ஆக்கிரமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியம் மீதான உக்ரேனின் தாக்குதல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ரஷ்யாவிற்குள் வெளிநாட்டு இராணுவம் ஆக்கிரமிப்பது இதுவே முதல் முறையென கூறப்படுகிறது.
முழு அளவிலான படையெடுப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், உக்ரேனின் எதிர்பாராத வளர்ச்சியென சர்வதேச ஊடகங்கள் மேலும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
உக்ரேனியப் படைகள் கடந்த செவ்வாய் கிழமை ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் சில மேற்குப் பகுதிகளை கைப்பற்றியதுடன் ரஷ்யாவுக்குள் உக்ரேனின் திடீர் ஊடுருவலின் போது பிரித்தானிய இராணுவ ஆயுத தாங்கிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உக்ரேன் தற்காப்புக்காக பிரித்தானியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த முழு உரிமை உள்ளதென பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகமும் கருத்து தெரிவித்துள்ளது.