July 8, 2025
உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி மருத்தவமனையில் அனுமதி
News News Line Top புதிய செய்திகள்

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி மருத்தவமனையில் அனுமதி

Nov 29, 2023

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவர் கைரைலோ புடனோவின் மனைவி மரியானா புடனோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

கிய்வ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நஞ்சூட்டப்பட்டுள்ளார் என உக்ரைனின் இராணுவ புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், அவர் எப்போது நஞ்சூட்டப்பட்டார் இதற்கு யார் காரணம் என்ற விபரங்களை உக்ரைன் வெளியிடவில்லை.

ரஷ்யாவிற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் காரணமாக ரஷ்யாவின் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பத்திற்கும் அதிகமான கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நஞ்சூட்டலிற்கு யார் காரணம் என்பது குறித்த விபரங்கள் வெளியாகாத அதேவேளை, உக்ரைன் புலனாய்வு பிரிவின் ஏனைய சிலரும் சிறிய நஞ்சூட்டல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பி.பி.சியின் உக்ரைன் சேவை தெரிவித்துள்ளது.

ரஷ்யா இது குறித்து எதனையும் தெரிவிக்காத நிலையில் இது உள்மோதல் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என ரஷ்ய ஊடகம்தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *