July 14, 2025
உங்களது மொபைலில் டெலிட் ஆன புகைப்படங்கள், காணொளிகளை எப்படி மீட்கலாம்?
தொழில் நுட்பம்

உங்களது மொபைலில் டெலிட் ஆன புகைப்படங்கள், காணொளிகளை எப்படி மீட்கலாம்?

Jul 3, 2024

உங்களது மொபைலில் நீங்கள் தவறுதாக அழித்துவிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எவ்வாறு மீட்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கூகுள் போட்டோஸில் நீங்கள் பொக்கிஷமாக வைத்திருந்த புகைப்படங்கள் அழிந்து விட்டால், அதனை மீட்டு எடுப்பதற்கு கூகுள் போட்டோஸ் ஒரு ட்ராஷ் பின்னை வழங்குகின்றது.

அதன்படி எவ்வாறு அதனை மீட்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

முதலாவதாக உங்களது போனில் உள்ள கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷனை திறந்து, கீழ் வலது மூலையில் காணப்படும் லைப்ரரி டேபை கிளிக் செய்யவும்.

அதிலே ட்ராஷ் ஆப்ஷன் இருக்கின்றதா என்பதையும் தேடி பாருங்கள். உங்களது சாதனத்தின் அடிப்படையில் அது ஒரு சப்-மெனுவின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு சில ஆண்ட்ராய்டு போன்களில் நீங்கள் மேல்புறமாக ஸ்வைப் செய்யும்போது ஸ்கிரீனில் முதலாவதாக அந்த ஆப்ஷன் தோன்றும்.

Trash என்பதை டேப் செய்ததும் நீங்கள் சமீபத்தில் டெலிட் செய்த அனைத்து புகைப்படம் மற்றும் காணொளியினை காணலாம்.

குறித்த பட்டியலை ஸ்க்ரோல் செய்தோ அல்லது தேடல் மூலமாகவே உங்களது விருப்ப காணொளியினை கண்டுபிடித்து மீட்டுக்கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் பல புகைப்படம் மற்றும் காணொளியினை மீட்டெடுக்க, வீடியோவை டேப் செய்து அழுத்திப் பிடித்து செலக்ட் செய்து கொள்ளவும்.

வீடியோக்களை செலக்ட் செய்தபிறகு ரீஸ்டோர் (Restore) பட்டனை கிளிக் செய்தால், பட்டன் பொதுவாக ஸ்கிரீனின் கீழ் அல்லது மேல் வலது மூளையில் காணப்படும்.
தற்போது மீட்டு எடுக்கப்பட்ட கூகுள் போட்டோஸ் லைப்ரேரியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *