நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்களில் தற்போதைய வேகத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இராஜகிரியவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வெளியே ஆதரவாளர்கள் மத்தியில் தனது வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
“இந்த வேகத்தை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எங்களால் நிறுத்த முடியாது” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் “நாங்கள் தொடங்கியுள்ள திட்டங்கள் குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும்.
அதன் பிறகு, நாம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கலாம். உங்களை பணக்காரர்களாக மாற்றலாம். புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம். உங்கள் எதிர்காலத்தை நான் பாதுகாப்பேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். அதைச் செய்ய ஆணையிடுங்கள்.”என்று தெரிவித்துள்ளார்.