அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றிவிடாமல் சருமத்தை அழகுப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீர் சருமத்துக்கு மட்டுமல்லாமல் முடிக்கும் மிகவும் நல்லது.
அரிசியை சுத்தமான நீரில் அரை மணித்தியாலம் ஊறவைத்து இரண்டு முறை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
பின் அந்த நீரை ஒரு துணியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
வடிகட்டிய நீரைக்கொண்டு முகம் மற்றும் கூந்தலை அலசினால் சருமத் துளைகளிலிருந்து சத்துக்கள் செல்களுக்கு செல்லும்.
அதனால் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கி சருமம் பொலிவாகும்.
கூந்தல் வறட்சியாக இருந்தால், அரிசி கழுவிய நீரினால் கூந்தலை கழுவி சிறிது நேரம் ஊறவைத்ததன் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதனால் கூந்தல் மென்மையாகும்.