வீடு கட்டும்போது அதன் அழகை மெருகேற்ற சின்னச் சின்ன விஷயங்களிலும் நிறைய கவனம் செலுத்தியிருப்போம். அதே போல் வேடு கட்டி முடித்த பிறகும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
வீட்டைப் பசுமையாக்கும் வீட்டுத்தோட்டம்.
வீடு பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் ஆரோக்கியம் தருவதாகவும் இருப்பது அவசியமகிறது. வீடு கட்டும் போது சில மரங்களையாவது வைத்து பராமரிக்கும் வகையில் இடம் விட்டு வீடு கட்டினால் வீடு ரம்மியமான அழகுடன் இருப்பதுடன் ஆரோக்கியமும் பெருகும்.
விசாலமான இடம் இருப்பவர்கள் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம். இடப்பற்றாக்குறை இருக்கிறது எனில், மாடித்தோட்டம் அமைத்துக் கொள்ளலாம். வீட்டைச் சுற்றித் தோட்டம் அமைப்பது பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல…
அது சுத்தமான காற்றைத் தரும், அழகைத் தரும், மனதுக்கு அமைதியைத் தரும், அதுவும் காய்கறித் தோட்டம் இருந்தால், வீட்டு செலவில் காய்கறிச் செலவை மட்டுப்படுத்தும் அழகான ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பு, அதில் அம்சமான ஒரு தோட்டம் போடுவதைப் பற்றியும் யோசித்தால்தான் அந்த அழகான வீடு, முழுமையான வீடாக அமையும்.
வீட்டை அழகாக மாற்றும் விதவிதமான சுவர் அலங்காரங்கள்.
வீடு கட்டியபின் வீட்டின் அழகை மெருகேற்றிக் காட்ட பெயிண்ட் அடிப்பது வழமையான ஒன்று. ஆனால் வீட்டை தனித்துவமாக காட்ட சுவர் அலங்காரம் செய்வது தற்போது டிரெண்டில் உள்ளது. சுவர் அலங்காரம் என்றால், நாம் விரும்பும் நிறத்துடன், விரும்பும் டிசைனையும் சுவரில் வடிவமைத்து வீட்டை அழகுபடுத்த முடியும். உங்கள் வீட்டுச் சுவரை அழகுபடுத்த சுவர்களில் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்து அழகு சேர்க்கலாம்.
வீட்டை அழகாக மாற்றும் எளிய அலங்கார பொருட்கள்.
பெரிய அலங்காரப் பொருட்களை விட வீட்டின் இடவசதிக்கு ஏற்ப எளிய அலங்காரப் பொருட்களைத் தேர்வு செய்வதே நல்லது.
பொருட்கள் வைக்கப்படும் இடத்தைப் பொறுத்தே அழகு வெளிப்படும். எனவே எந்த இடத்தில் எந்த பொருளை வைக்கலாம் என்பதை யோசித்து வைக்கவும் வீட்டுச்சுவரில் குழந்தைகள் படம் மாட்டினால் வேடு அழகாக இருக்கும். இயற்கை காட்சிப்படங்கள் பசுமைச்சூழல் புகைப்படங்கள் அறையை அழகாக காட்டும்.
அழங்கார செடிகளை வீட்டிற்குள் வைத்து அலங்கரிக்கலாம். திரைச்சீலைகல் வீட்டின் யன்னல் கதவுகளுக்கு ஏற்ப அமைய வேண்டும்.குஷன்களை வீட்டில் பயன்படுத்தலாம். இவை வீட்டுக்கு ஆடம்பர அந்தஸ்தைத் தரும். அறையின் சுவர் வண்ணங்களுக்கு ஏற்ப குஷன்களின் தேர்வு இருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும்.